எபிசோட் 1
பூமியின் கடைசி காதல் எபிசோட் 26நீனி வீட்டில் இருந்தான்.தியானி இன்னும் கால்முட்டி வலி. அதனால் படுக்கையில் இருந்தாள். அவளுக்கு இவன் ஓய்வு தந்திருந்தான்.”மாஸ்டர்..” என்று சிணுங்கல் குரலில் அழைத்தாள்.அந்த அறையில் இருந்த பூச்செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவன் “ம்ம்ம்..” என்றான்.”லைட்டா பசிக்குது..” அவள் குட்டி குரலில் சொல்ல, அவன் உடனே தன் கையில் இருந்த பூவாளியை வைத்துவிட்டு வந்தான்.”சாப்பிட என்ன வேணும்?” என்று கேட்டான். பசிக்கின்றதா என்று அவளிடம் முன்பே கேட்காமல் போனதற்காக வருத்தப்பட்டான்.”புட்..” என்றவளிடம் “இட்லி தோசை, சப்பாத்தி பூரி, வெரைட்டி ரைஸ் பிரியாணி, பிட்சா பர்கர், நூடுல்ஸ் பாஸ்தா..” என்றான்.இவள் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.”இதை நான் ஒருநாள் லைப்ரரி புத்தகத்துல படிச்சேன். பழைய கால மனுஷங்க சாப்பிட்ட உணவு!” என்றாள்.இவன் நெற்றியில் அடித்துக் கொண்டான்.”சாரி. உனக்கு பருப்பு, அரிசி, கோதுமை, காய்கள்.. இதுல எதை பயன்படுத்தி சமைக்கணும்?” என்று கேட்டான்.”அரிசி உணவு. இல்லன்னா உங்களுக்கு பிடிச்சது..” என்றாள்.இவன் யோசித்தான். “ஓகே!” அவளின் கன்னம் கிள்ளி தன் ஒற்றைக்கண் அடித்து விட்டு போனான். “மாஸ்டர் ஏன் எப்ப பார்த்தாலும் ஒரு ஷட்டரை மட்டும் மூடுறாரு?” இவள் குழப்பத்தோடு தலையை கீறி கொண்டாள்.நீனி சமையலறைக்குச் சென்றான்.அவனுடைய ஆப்டிகல் சென்சார் தன் இருந்த முன்னால் சமையல் பாத்திரங்களை பார்த்தது. ஆனால் அவனுடைய இன்னர் கோர் வேறு ஒன்றை உளவுப் பார்த்துக் கொண்டிருந்தது.ஆர்கானின் சிட்டியில் இருந்து ஒரு கட்டளை புறப்பட்டது. வேறு யாரும் அறிய கூடாது என்று அந்த செய்தியை பிரைவேட்டாக அனுப்பிக் கொண்டிருந்தனர். அது ஒரு ரோபோட்டிடமிருந்து மற்றொரு ரோபோட்டுக்கு சென்றது. அப்படியே சங்கிலி போல் சென்றது.”சர்ச் அன்நோன் கோர்..” என்பதுதான் அந்த கட்டளை.அவர்கள் முதல் ஆளுக்கு அந்த செய்தியை அனுப்பியபோதே நீனியின் கோர் அதை படித்து விட்டது. “மறைமுகமா அனுப்பினா என்னால படிக்க முடியாதா?” அவனுக்கு சிரிப்பு வந்தது.இந்த கூட்டத்தின் செயல்பாட்டை பார்த்து சிரித்தபடியே அவன் அரிசியை கழுவினான்.அடுத்த தகவல் வந்தது.’டார்கெட்டோட லொக்கோஷனை கண்டுப்பிடிக்க முடியல!’ அவன் காய்கறியை நறுக்கினான்.”பாரம்பரிய இடத்தை தேடுங்க!” என்று சொல்லி மற்றொரு தகவல் வந்தது. மின்சார அடுப்பை ஆன் செய்த நீனிக்கு அவர்களின் பாரம்பரியம் என்ற பெயர் மீண்டும் சிரிப்பை தந்தது.”பாரம்பரியம்ன்னா என்னன்னு இவங்களுக்கு தெரியுமா? நூறு வருசம் முன்னாடி வாழ்ந்த பழைய நகரத்தை பாரம்பரியம்ன்னு சொல்றாங்க. தப்பு இவங்க மேலயும் இல்ல..” என்று முணுமுணுத்தான்.அவனுடைய கோருக்குள் ஓடிக்கொண்டிருந்த அந்த தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவனுடைய மெமரியில் பதிந்தன.மனிதரை காணும் கடவுள் போல அவன் தனக்குள் இருந்த அதி சக்தி வாய்ந்த கோரின் உதவியோடு அந்த அண்டர்வேர்ல்ட்டில் நடக்கும் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருந்தான். ஹெலிக்ஸ் சிட்டியிலிருந்து ஒரு உளவு ரோபோட் எல்டருக்கு தகவல் அனுப்பியது. ‘ஓல்ட் கோரை டிடெக்ட் பண்ண முடியல!’அந்த தகவலும் நீனியின் சர்வரில் தோன்றியது. அவன் சின்னதாக சிரித்தான்.”எல்லோரும் என்னை தேடுறாங்க. ஆனா நான் என்ன பண்ணேன்னு இந்த கிறுக்கனுங்க இப்படி வலை போட்டு தேடுறாங்க!?” அவனுக்கு அதுதான் தெரியவில்லை.”மர்மமா இருக்குது. ஒன்னுமே புரியல உலகத்திலே!” என்று பாட்டு பாடினான்.”என் வாய்ஸ் ஏன் இவ்வளவு கர்ண கொடூரமா மாறி போயிருக்கு?” அதிர்ந்தவன் தன் வாய்ஸை இன்னும் கொஞ்சம் ஸ்வீட்டாக மாற்றிக் கொண்டான்.அதை மாற்ற அவன் தனியாக கம்ப்யூட்டரோடு தன்னை இணைத்து, தன் சர்வருக்குள் புகுந்து எதையும் மாற்றி அமைக்க வேண்டி இருக்கவில்லை. அவன் தன் கோருக்கு மனதுக்குள்ளேயே கட்டளையிட்டான். அதுவும் மாறிக் கொண்டது.மற்ற ரோபோக்கள் பார்த்தால் அவனை வாழும் கடவுள் என்பர். இல்லை இவன் தன்னை தானே பல ஆயிரம் முறை அப்டேட் செய்துக் கொண்ட, அத்தனை அம்சங்களையும் கொண்ட ஹைடெக்.. பட் பழைய ரோபோட். தியானி அவனை தேடி வந்தாள். “தனியா இருக்க பிடிக்கல மாஸ்டர்..” என்றாள்.அவன் திரும்பி அவளை ஏற இறங்க பார்த்தான்.கத்தியை வைத்து விட்டு அவளை நெருங்கியவன் அவளின் இடுப்பை பற்றி தூக்கி அங்கிருந்த கவுண்டர்டாப் மீது அமர வைத்தான்.அங்கே போதுமான இடமே இல்லை. இவனுக்கு இந்த கிச்சனை பிடிக்கவில்லை. அவளின் அடிபட்ட காலுக்கு சப்போர்ட் வேண்டுமென்று ஒரு ஸ்டூலை நகர்த்தி அதன் மீது அவளின் கால்களை தூக்கி வைத்தான்.காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தவன் “உனக்கு ஸ்வீட் பிடிக்குமா காரம் பிடிக்குமா?” என்று கேட்டான்.”ஸ்வீட்!” என்றாள்.”ஏனா நீ இதுவரை சரியான கார உணவை சாப்பிட்டிருக்கல!” என்றான்.”ஆனா உங்களாலும் சாப்பிட முடியாதே!” என்றாள் கிண்டலாக.அவன் அங்கிருந்த மிளகாயை எடுத்து கடித்தான். அவன் வாய்க்குள் இருந்த செயற்கை சுவை உணர் நரம்புகள் மிளகாயின் ருசி பற்றி சொல்லின.அவன் முகத்தை சுளித்தான்.”இது என்ன இவ்வளவு கேவலமான டேஸ்ட்ல இருக்கு? காரத்துக்கு பதிலா கசக்குது..” என்று முணுமுணுத்தான்.மற்ற காய்களை எடுத்து கடித்தான். கலப்படம் இல்லாத மண்ணுக்கு பயங்கர ருசி உண்டு. ஆனால் இந்த காய்கறிகளுக்கு உருப்படியாக எந்த ருசியும் இல்லை. ‘இதையெல்லாம் சாப்பிடறதுக்கு பதிலா செத்து போகலாம்..’ என்று நினைத்தவன் தனக்குள் இருந்த கோரை பயன்படுத்தினான்.இருந்த இடத்தில் இருந்தபடியே இந்த அண்டர்வேர்ல்ட்டின் முக்கிய கணினி தகவல் ஸ்டோர்ஜ்களில் புகுந்து தகவலை தேடினான். பூமியின் மேற்பரப்பு பற்றிய தகவல்கள் கிடைத்தன. பூமியின் மேற்பரப்பில் இருக்கும் கேமராக்கள் வழி பூமியை பார்த்தான்.”ஓ காட்! என்ன இவ்வளவு கர்ண கொடூரமா இருக்கு?” என்று அவன் வாய் திறந்து அதிர்ச்சியோடு சொல்ல, “என்னாச்சி மாஸ்டர்?” என்று கேட்டாள் அருகில் இருந்த தியானி.”என்னை நீனின்னு கூப்பிடு!” என்றான்.”என்ன கர்ண கொடூரமா இருக்குன்னு சொல்லுங்க. இந்த உணவா?” என்று கேட்டாள்.”இல்ல. அது ஒரு இடம்!” என்றவன் நல்ல உணவு எங்கே கிடைக்கும் என்று தன் கோரை பயன்படுத்தி அத்தனை சர்வரையும் ஹேக் செய்து தேடினான்.எங்குமே நல்ல உணவு இல்லை. பிராணிகளுக்கான உணவு என்பதால் அரைகுறையாக விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள்.சாதாரண பூமியில் வாழ்ந்தபோது முத்தி போன காய்களை யாரும் சாப்பிட மாட்டார்கள். ஆனா இங்கே முத்திப்போன காய்கள்தான் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்தன. பருப்புகள் முழுதாய் விளையும் முன்பே அறுவடை செய்யப்பட்டு கொண்டிருந்தன. இதுபோல் மட்ட ரக அரிசியை நரகத்தில் கூட கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இந்த விஷயத்தில் இந்த நகரத்தில் இருப்போர் மீது எந்த தவறும் இல்லை.நல்ல தானிய விதைகளை இவர்கள் இழந்து விட்டார்கள். நல்ல தானியங்கள் எப்போதோ அழிந்துவிட்டன. அதுவும் இல்லாமல் ரோபோக்களுக்கு உணவின் ருசி பற்றி அவ்வளவாக தெரியாது. அதனால்தான் தங்களால் எந்த உணவை விளைவிக்க முடிந்ததோ அந்த உணவுகளை விளைவித்து கொண்டிருந்தார்கள்.இப்படிப்பட்ட பூமியிலும் அவர்கள் இத்தனை மனித பிராணிகளை உயிரோடு வளர்த்துக் கொண்டிருப்பதே பெரிய விஷயம். இவன் தியானியை பார்த்தான். அவள் இத்தனை நாட்களும் இதேதான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். ருசி பார்ப்பதை விட இப்போதைக்கு பசி தீர்ப்பதே முக்கியமான விஷயம். அதனால் அவன் மீண்டும் சமையல் செய்வதில் மூழ்கினான்.ஆர்கானின் ஆட்கள் ஒரு பழைய தொழிற்சாலைக்குள் நுழைந்தனர்.அங்கிருந்த கேமராக்களை அவர்கள் ஹேக் செய்தனர். அங்கே பதிவாகி இருந்த வீடியோக்களை சோதிக்க ஆரம்பித்தனர்.நீனி அதை தன் மனதுக்குள் பார்த்துக் கொண்டிருந்தான்.எல்டரின் ஆட்கள் ஒரு பழைய ரோபோட் கல்லறையை திறந்தனர்.அதையும் அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.ஆர்கானின் உளவு ரோபோட் ஒன்று புதிய தகவலை அனுப்பியது.”வடக்கு பகுதி தோல்வி..”அந்த தகவலும் அவனுக்குத் தெரிந்தது.அவன் பாத்திரத்தில் மசாலாக்களை சேர்த்தான். அடுப்பின் ஹீட்டை குறைத்தான்.சீரியல் பார்த்துக் கொண்டே சமைக்கும் அந்த கால பெண்ணின் திறமை தனக்கு இருப்பதாக நினைத்து உள்ளுக்குள் சிரித்தான்.அவனுடைய கண்கள், கோர், மெமரி என்று எல்லாமே அமைதியாக இருந்தன. பதட்டம் இல்லாமல் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தன. அண்டர்வேர்ல்டில் இருக்கும் இரண்டு மிகப்பெரிய சக்திகளும் தேடும் அளவுக்கு தன்னிடம் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன என்று நீனிக்கு தெரியும். ஆனால் அவர்கள் எதற்காக தேடுகிறார்கள்? அதை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.இருப்பதை வைத்து தன்னால் முடிந்த அளவுக்கு ருசியாக சமைத்தான். சமையல் முடிந்ததும் நீனி உணவை பரிமாறி எடுத்துக் கொண்டு தியானியின் அருகில் வந்தான்.”வாயை திற..””நானே சாப்பிடுக்கிறேன்..” கையை நீட்டினாள்.இவன் செல்லமாக முறைத்து விட்டு தானே உணவை ஊட்டினான்.அவள் ஆச்சரியப்பட்டாள். “மாஸ்டர் இந்த சாப்பாடு ரொம்ப டேஸ்டா இருக்கு!” என்று வியப்போடு சொன்னாள்.இவன் சந்தேகத்தோடு ஒரு ஸ்பூன் நிறைய உணவு அள்ளி தன் வாயில் வைத்தான். கொடூரத்தை விட கொடூரமாக இருந்தது.அதை அவளிடம் சொல்ல விரும்பாமல் “ஆமா டேஸ்டா இருக்கு. நீ சாப்பிடு..” என்று ஊட்டினான். அவள் சப்பு கொட்டி சாப்பிட்டாள்.அவளின் முகத்தில் இருந்த புன்னகையில் இவனுக்கு உலகமே நிறைவது போல் இருந்தது.”மாஸ்டர்!?” அவள் கொஞ்சமாக அழைக்க, “நீனி!” என்று திருத்தினான்.”சரி.. நீனி!?” என்றாள்.”ம்ம்!? சொல்லுங்க மகாராணி..” “நீங்க என்னை இவ்வளவு காதலிக்கிறதுக்கு காரணம் என்ன?” இவ்வளவு ருசியான உணவை தருபவன் கண்டிப்பாக நம்மை அளவில்லாமல் காதலிக்கின்றான் என்று நம்பியது அவளின் குட்டி இதயம். அவன் அவளின் விழிகளை பார்த்தான்.அவனுடைய ஆப்டிகல் சென்சாரின் மெல்லிய ஒளி அவளுடைய கண்களில் பிரதிபலித்தது.”காரணம் இல்லாம வரும். அதனாலதான் அதுக்கு காதல்ன்னு பேரு..” என்றவன் அடுத்த வாய் உணவை ஊட்டினான்.”கண்ணு முன்னாடி ஒரு உலகமே தெரியும். ஆனா நமக்கு பிடிச்சவங்க கண்ணுல அந்த உலகத்தை விட பெருசா ஒரு நட்சத்திரக் கூட்டம் தெரியும். அதுதான் காதல்..” என்று சொன்னான்.அவளின் உதட்டோரத்தில் ஒட்டியிருந்த உணவை தன் விரலால் மெதுவாக துடைத்தான். இவள் தன் விழிகளை விரித்தாள். “என் கண்ணால நட்சத்திர கூட்டம் தெரியுதா?” என்று கேட்டாள். ஆனால் நட்சத்திர கூட்டம் என்றால் என்ன என்று அவளுக்கு தெரியாது. “நான் கதையில் படிச்ச தேவதைகளின் உலகம் கூட தெரியுது. நீயே ஒரு தேவதைதான்!” என்றான் கொஞ்சலாக. அதே நேரத்தில் “ஹெலிக்ஸ் சிட்டியில் டார்கெட்டை சர்ச் பண்ணுங்க!” என்று எல்டரின் ஆட்கள் உத்தரவிட்டனர். ஹெலிக்ஸ் சிட்டியில் இருந்த சாதாரண வீடுகள் ஒவ்வொன்றிலும் புகுந்து தங்களின் தேடுதல் வேட்டையை தொடங்கினார்கள் எல்டரின் ஆட்கள்.நீனி அந்த தகவலையும் பார்த்தான். பிறகு தியானியை பார்த்தான். “நீ சாப்பிடும்போது க்யூட்டா இருக்க..” என்றான். “அப்புறம்?” என்று கேட்டவளிடம் “நீ பேசும் போது, சிரிக்கும்போது, நடக்கும் போது, தூங்கும் போது கூட என் கண்ணுக்கு க்யூட்டாதான் தெரியுற..” என்றான்.அவளிடம் பேசியபடியே தனது கோரின் பழைய அடையாளத்தை தன் மெமரியின் ஆழ அடுக்கில் மறைத்தான். நூலகத்தில் வேலை செய்யும் ஒருவனாக தனது கோரின் அடையாளத்தை மாற்றினான்.இரண்டு நகரங்களின் படைகளும் இந்த 1300+ வருட பழைய ரோபோட்டை தேடிக் கொண்டிருந்தன.ஆனால் அவனோ ரொம்ப கூலாக தன் காதலிக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தான். யாரோ சிலர் ஒரு கணக்கு போட்டனர். எல்டர் ஒரு கணக்கு போட்டார். ஆர்கான் ஒரு கணக்கு போட்டான். இப்போது நீனி ஒரு கணக்கை அவசரமாக போட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டான்.தொடரும்.